Digitalpuram logo png

டிஜிட்டல் ஷோரூம் App | Digital Showroom app review in tamil

Digital Showroom app in tamil

Digital Showroom :

ஜீரோ முதலீடு அதிக லாபம் என்ற இத்தொடரில் டிஜிட்டல் மார்க்கெட்டிங் தொடர்பான தகவல்களை பார்த்து வருகிறோம். சென்ற இதழில் Facebook Marketing எவ்வாறு தொடங்குவது அதன் மூலம் எவ்வாறு உங்கள் தொழிலை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்வது என்பதை பற்றி பார்த்தோம்.

இந்த இதழில் Digital Showroom என்ற மொபைல் ஆப்பை பயன்படுத்தி ஜீரோ முதலீட்டில் வருவாயை அதிகப்படுத்துவது பற்றி பார்ப்போம்

டிஜிட்டல் ஷோரூம் என்பது ஒரு மொபைல் ஆப் ஆகும். இது ஆண்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் என 2 தளங்களிலும் பயன்படுத்தக் கூடிய வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. டாட் பே” என்ற நிறுவனம் டிஜிட்டல் ஷோரூம் ஆப்பை செப்டம்பர் 2020ல் செயல்பாட்டிற்கு கொண்டு வந்தது.

தற்பொழுது உலகம் முழுவதும் 4.5 மில்லியனுக்கும் அதிகமான தொழில் செய்வோரை தனது வாடிக்கையாளராக கொண்டுள்ளது இந்த ஆப். 

டிஜிட்டல் ஷோரூம் ஆப்பை ப்ளே ஸ்டோர் அல்லது ஆப் ஸ்டோர் ஆகியவற்றில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பதிவிறக்கம் செய்தபிறகு முதன்முதலில் அந்த ஆப்பை திறக்கும்போது நமது வாட்ஸ்அப் எண்ணை இணைக்குமாறு கேட்கும். வாட்ஸ்அப் எண்ணை இணைத்த பிறகு Add Products பட்டனை பயன்படுத்தி வியாபாரத்திற்கான பொருட்களை பதிவேற்றம் செய்துகொள்ளலாம்.

பொருளின் புகைப்படம், விலை, அதை பற்றிய சிறு தகவல் ஆகியவற்றை பதிவிடலாம். ஒரு பொருளுக்கு 4 புகைப்படங்ள் வரை பதிவேற்றி கொள்ளலாம்.

இவ்வாறு வியாபாரத்திற்கான அனைத்து பொருட்களையும் கேட்டகிரிகளாக பிரித்து கேட்டலாக் வைத்துக்கொள்ளலாம். இந்த ஆப் வாட்ஸ்அப் செயலி உடன் இணைந்து செயல்படுவதால் இந்த கேட்டலாக்ை வாட்ஸப் எண்களுக்கு இலகுவாக ஷேர் செய்து கொள்ள முடியும்.

வாட்ஸ் ப்பில் இலகுவாக ஷேர் செய்யும் வகையில் ஷேர் வாட்ஸ் ஆப் என்ற ஒரு பட்டன்  கொடுக்கப்பட்டுள்ளது. இது வாட்ஸ்ப் செயலி உடன் இணைந்து செயல்படுவதால்,  வாடிக்கையாளருடன் தொழில் செய்வோர் உரையாடலை இலகுவாக மேற்கொள்ள முடியும்.

இதன்மூலம் தொழிலின் தரம் மேலும் பின்னூட்டம் ஆகியவற்றை தொழில் செய்வோர் இலகுவாக பெற முடிகிறது.  இது அவர்களின் பொருட்களை இன்னும் தரமாகவும் வாடிக்கையாளர்களுக்கு பிடிக்கும் வகையிலும் தயாரிக்க உதவுகிறது.

Catalogue:

இந்த ஆப்பில் உருவாக்கப்பட்ட கேட்டலாக்ை பிடிஎஃப் வடிவில் டவுன்லோட் செய்து கொள்ளலாம். அதை இ-மெயில் மூலமாகவோ அல்லது மற்ற வசதிகள் மூலமாகவோ வாடிக்கையாளர்களுக்கு அனுப்பி வைக்க முடியும்.

வாட்ஸ்அப் மூலம் அனுப்பப்படும் லிங்குகளை பயன்படுத்தி வாடிக்கையாளர்கள் தேவையான பொருட்களை பெற்றுக்கொள்ளலாம். ஆட் கார்ட் என்ற ஆப்ஷனை பயன்படுத்தி தேவையான பொருட்களை கார்டில் சேர்த்துக்கொள்ளலாம்.

பின்பு ஷாப் என்ற பட்டனை பயன்படுத்தி ஆன்லைன் பேமெண்ட் மூலமாகவும் பொருட்களை வாடிக்கையாளர்கள் வாங்கலாம். கூகுள் பே, போன்பே போன்ற யுபிஐ பயன்படுத்தும் பணபரிவர்த்தனை செயலிகள் மூலமாகவும் வாட்ஸ்அப் மூலமாகவும் பணம் பரிமாற்றம் செய்து கொள்ளலாம்.

டிஜிட்டல் ஷோரூம் ஆப் மூலமாக எவ்வளவு வியாபாரம் நடந்து இருக்கின்றது, எவ்வளவு வருமானம் ஈட்டப்பட்டுள்ளது என்று அனைத்து தகவல்களும் இந்தப் ப்பிலேயே இருக்கும். ஒரு வாரம் எவ்வளவு வியாபாரம் நடந்து இருக்கின்றது ஒரு வாரத்தில் எவ்வளவு வருமானம் ஈட்டப்பட்டுள்ளது எவ்வளவு ஆர்டர் புதிதாக வந்துள்ளது போன்ற அனைத்து விதமான தகவல்களையும் பெற்றுக்கொள்ளலாம்.

இந்த டிஜிட்டல் ஷோரூம் ஆப் ஆனது சிறு குறு தொழில் செய்பவர்களுக்கு வரப்பிரசாதமான ஒரு ஆப் ஆகும். இனி இந்த ஆப்பை பயன்படுத்தி சிறு முதலீட்டில் அதிக லாபத்தை பெறுங்கள்.

Share on facebook
Facebook
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp

Would you like to start a project with us?