Digitalpuram logo png

Digital Marketing வகைகள் | Types of digital marketing in tamil

Types of digital marketing in tamil :

சென்ற கட்டுரையில் Digital Marketing என்றால் என்ன?, அதன் தேவைகள், அவசியம் ஆகியவற்றை கண்டோம், மேலும் டிஜிட்டல் மார்க்கெட்டிங்-ன் முக்கியமான சில வகைகளையும் கண்டோம். இந்த இதழில் டிஜிட்டல் மார்க்கெட்டிங்-ன் வகைகளை ஆழமாக காண்போம்.

டிஜிட்டல் மார்க்கெட்டிங்-ல் மிகவும் முக்கியமானது, உங்களது வாடிக்கையாளர்களை ( Target Audience ) கண்டறிந்து, அவர்கள் எந்த இணையதள கருவியை பயன்படுத்துகின்றனர் என ஆராய்ந்து அங்கு சந்தைப்படுத்துவது ஆகும்.

மேலும் நீங்கள் தேர்ந்தெடுக்கும் சந்தைப்படுத்தல் முறைக்கு உகந்த இணையதள கருவியை பயன்படுத்துவது மிகவும் அவசியமாகும். வாருங்கள் டிஜிட்டல் மார்க்கெட்டிங்-ன் வகைகளை ஆழமாக காண்போம்.

Social Media Marketing :

இன்றைய சூழ்நிலையில் சமூக வலைத்தள(Social media) பயன்பாடு அதிகரித்துள்ளது. எனவே ஒரு தயாரிப்பை மக்களிடம்  சென்றுசேர்க்க சமூக வலைத்தள மார்கெட்டிங் மிகவும் அவசியமானதாக மாறியுள்ளது.

Facebook, Instagram, Linkedin, Pintrest போன்ற சமூக வலைத்தளங்களில் நிறுவனத்திற்கென   தனி பக்கம்  தொடங்கி, அதன் தயாரிப்பு அல்லது சேவையின் தனித்தன்மைகள், அதன் அவசியம், என்னென்ன சேவைகள் வழங்குகிறீர்கள் போன்ற தகவல்களை அடிக்கடி  அந்த பக்கத்தில்  பதிவிடவேண்டும்.

இதன் மூலம் நிறுவனத்திற்கு செலவில்லாமல் பிரபலம் கிடைக்கும், மேலும் வியாபாரமும் அதிகரிக்கும்.

Video Marketing :

 வீடியோக்கள் மூலம் மிக ஒரு நிறுவனம் (அ ) சேவை பற்றிய தகவலை எளிமையாக விளக்க முடியும் மற்றும் விளம்பரப்படுத்த முடியும்.

Animation video, Brand videos, Explainer video  போன்ற பல வகை வீடியோக்கள் மூலம் நிறுவனம் (அ ) சேவையை சந்தைப்படுத்தலாம். 

அந்த வீடியோக்களை Youtube, Vimeo, Dailymotion போன்ற வீடியோக்கள் பதிவிடும் தளங்களில் அப்லோட் செய்யலாம். இதன்மூலம் செலவில்லாமல் நிறுவனத்தை பற்றிய தகவலை அதிக வாடிக்கையாளர்களிடம் சென்று சேர்க்கலாம்.

தற்போது Youtube தான் Googleக்கு அடுத்தபடியாக உள்ள தேடுபொறி. எனவே அதனை பயன்படுத்தி சந்தைப்படுத்துவது மிக முக்கியமாக உள்ளது.

 

Email Marketing :

தயாரிப்பு மற்றும் சேவையை பற்றி வாடிக்கையாளர்களுக்கு  தெரியப்படுத்த அவர்களின் ஈமெயில் முகவரிக்கு தகவல்களை அனுப்புவது Email Marketing ஆகும்.

பல இணையதள கருவிகள்  மூலம் மொத்தமாக மின்னஞ்சல்களை வாடிக்கையாளர்களுக்கு அனுப்பலாம். Mailchimp, Aweber, Freshmail, Constant contact போன்ற பல நிறுவனங்கள் குறைந்த செலவில் மின்னஞ்சல் சேவையை வழங்குகின்றன. 

Email Marketing என்பது எப்போதுமே குறைந்தபட்ச உத்தரவாதம் தரக்கூடிய மார்க்கெட்டிங் முறை ஆகும். 

 

Mobile Marketing :

தற்போது அனைவருமே இணையத்தை மொபைல் வழியாகத்தான் பயன்படுத்துகின்றனர். எனவே மொபைல் மார்க்கெட்டிங் தவிர்க்க முடியாத மார்க்கெட்டிங் முறையாக மாறியுள்ளது. 

தயாரிப்பு மற்றும் சேவையை சரியான வாடிக்கையாளரை சென்றுசேர்க்க App ads, Location-based ads, SMS, In-game ads போன்ற பல மொபைல் மார்க்கெட்டிங் உத்திகளை பயன்படுத்தலாம்.

Push notifications என்பது ஒருவகையான மொபைல் மார்க்கெட்டிங் முறை ஆகும். இந்த முறையின் மூலம் வாடிக்கையாளரின் மொபைல் எண்ணுக்கு நேரடியாக தகவலை அனுப்பலாம்.

இதன் மூலம் குறைந்த செலவில் அதிக வாடிக்கையாளர்களிடம் தயாரிப்பு மற்றும் சேவை பற்றிய தகவலை சென்று சேர்க்கலாம்.

 

E-Commerce Marketing :

இந்த வகை மார்க்கெட்டிங்கானது தயாரிப்பு சார்ந்த நிறுவனங்களுக்கு உகந்த முறையாகும். Amazon, Flipkart, E-bay, Indiamart போன்ற E-Commerce தளங்களில் உங்கள் தயாரிப்பு அல்லது நிறுவனத்திற்கென தனி பக்கத்தை உருவாக்கி அதில் உங்கள் தயாரிப்புகளின் விவரங்களை பதிவு செய்யலாம். 

இன்றைய சூழ்நிலையில் அதிகப்படியானோர் ஆன்லைன் ஷாப்பிங் செய்வதயே விரும்புகின்றனர். அதற்கு  காரணம் Amazon, Flipkart போன்ற நிறுவனங்கள் தள்ளுபடி விலையில் பொருட்களை தருவதே ஆகும்.

எனவே இம்மாதிரியான E-Commerce தளங்களில் உங்களது தயாரிப்பை பதிவு செய்வதால் வியாபாரம் அதிகரிக்க அதிக வாய்ப்பு உண்டு. ஆனால் உங்களது ஒவ்வொரு விற்பனைக்கும் ஒரு குறிப்பிட்ட சதவிகிதத்தை அந்த E-Commerce தளம் எடுத்துவிட்டு தான் மீதம் உள்ள தொகையை உங்களுக்கு தரும்.

இந்த டிஜிட்டல் மார்க்கெட்டிங் முறைகளை பயன்படுத்தி உங்களது தயாரிப்பு அல்லது சேவையை  குறைந்த செலவில் அதிக வாடிக்கையாளர்களை சென்று சேர்த்து அதிக லாபத்தை ஈட்டுங்கள்.

அடுத்த கட்டுரையில் உங்களது தொழிலை கூகுளில் இணைக்க செலவில்லாமல் Google My Business அக்கவுண்ட் எவ்வாறு தொடங்குவது என்பதை விரிவாக காண்போம். 

Share on facebook
Facebook
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp

Would you like to start a project with us?