Digitalpuram logo png

Digital Marketing என்றால் என்ன? | Digital Marketing in Tamil

Types-of-Digital-Marketing

Digital Marketing in Tamil

 

Digital Marketing என்பது ஒரு சேவை அல்லது தயாரிப்பை இணையத்தை பயன்படுத்தி இணைய உலகில் சந்தைப்படுத்தும் ஒரு செயல்முறையாகும் .

தற்போதைய டிஜிட்டல் உலகில் உங்களது பிசினஸ் ஆன்லைனில் இல்லையென்றால் நீங்கள் போட்டியிலேயே இல்லை என்ற சூழல் உருவாகியுள்ளது

 உங்களது பிசினஸை டிஜிட்டலில் கொண்டு வருவதன் அவசியம் ( Importance of digital marketing)

இணைய தொழில்நுட்பங்களின் வளர்ச்சியால் சந்தைப்படுத்துதலில் அளப்பரிய மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றன.

1) மிகப்பெரிய அளவிலான நிறுவனங்கள் மட்டுமே அதிகப்படியான வாடிக்கையாளர்களை கவர முடியும் என்ற நிலை தற்போது மாறியுள்ளது. சிறிய அளவிலான முதலீட்டில் அதிக வாடிக்கையாளர்களை சென்றடைய முடியும் என்ற சூழல் தற்போது உருவாகியுள்ளது.

2) ஒரு சேவை அல்லது தயாரிப்பின் சரியான வாடிக்கையாளரை சென்றடைய டிஜிட்டல் மார்க்கெட்டிங் அதிக அளவில் உதவுகிறது.

3) ஒரு சேவை அல்லது தயாரிப்பின் பின்னூட்டத்தை(Feedback) உடனுக்குடன் அறிய டிஜிட்டல் மார்க்கெட்டிங் பயன்படுகிறது. இதன் மூலம் ஒரு சேவை அல்லது தயாரிப்பின் தரத்தை அதிகப்படுத்தலாம்.

4) ஒரு சாதாரண நிறுவனத்தை ஒரு பிராண்டாக(Brand) மாற்றுவதற்கும் டிஜிட்டல் மார்க்கெட்டிங் உதவுகிறது.

5) டிஜிட்டல் மார்க்கெட்டிங் மூலம் உள்ளூர் வாடிக்கையாளர்கள் மட்டுமின்றி உலக அளவில் வாடிக்கையாளர்களை கவர முடியும்.

6) நியூஸ் பேப்பர், ரேடியோ டிவி, ஆகியவைகளை கடந்து தற்போது இணையத்தில் அனைவருமே அதிக நேரம் செலவிடுகின்றனர் எனவே ஒரு பிசினஸை சந்தைப்படுத்துவதற்கான சிறந்த இடமாக இணையம் மாறியுள்ளது.

இத்தகைய காரணங்களால் உங்களது பிசினஸை இணையத்தில் மார்க்கெட்டிங் செய்வது அவசியம் ஆகியுள்ளது.

டிஜிட்டல் மார்க்கெட்டிங்-ன் வகைகள் ( Types ) :

  • தேடுபொறி உகப்பாக்கம் – Search Engine Optimization
  • கட்டணத் தேடுபொறிச் சந்தைப்படுத்தல் – Search Engine Marketing
  • சமூக வலைத்தள சந்தைப்படுத்தல் – Social Media Marketing
  • காணொளி சந்தைப்படுத்தல் – Video Marketing
  • உள்ளடக்கம் சந்தைப்படுத்தல் – Content Marketing
  • ஆன்லைன் புகழ் மேலாண்மை – Online Reputation Management
  • கன்வெர்சன் விகித உகப்பாக்கம் – Conversion Rate Optimization
  • மின்னஞ்சல் சந்தைப்படுத்தல் – Email Marketing
  • உள்ளடக்க தானியக்கம் – Content Automation
  • மின்வணிக சந்தைப்படுத்தல் – E-Commerce Marketing
  • கைபேசி சந்தைப்படுத்தல் – Mobile Marketing

உங்களது பிசினஸை ஆன்லைனில் கொண்டுவந்து அதனை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்ல பல்வேறு இணைய தொழில்நுட்பங்கள் தற்போது உருவாகியுள்ளன.

அவற்றில் முக்கியமானவைகள் :

Google My Business, Facebook, Instagram, Twitter, Linkedin, Pintrest, Youtube, Website

இந்த இணையதள கருவிகளை பயன்படுத்தி எவ்வாறு உங்களது பிசினஸை இணையத்தில் பிரபலப்படுத்துவது மற்றும் வருவாயை அதிகப்படுத்துவது என்பவைகளை ஒவ்வொன்றாக காண்போம்.

Share on facebook
Facebook
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp

Would you like to start a project with us?