Digitalpuram logo png

இமெயில் மார்கெட்டிங் என்றால் என்ன? E-mail Marketing in Tamil.

email marketing in tamil

சென்ற கட்டுரையில் Google My Business பற்றி பார்த்தோம். இந்த கட்டுரையில் E-mail Marketing பற்றி விரிவாக காண்போம்.  

இமெயில் மார்கெட்டிங், மற்ற டிஜிட்டல்  மார்கெட்டிங் முறைகளை காட்டிலும் பழமையான முறைதான், இருப்பினும் 4 பில்லியனுக்கும் அதிகமான மக்கள் இமெயில் மார்கெட்டிங்கை பயன்படுத்துகின்றனர். ஏனென்றால் இமெயில் மார்கெட்டிங் முறை எப்போதுமே குறைந்தபட்ச உத்தரவாதம் தரக்கூடிய மார்க்கெட்டிங் முறை ஆகும்மேலும் இது மற்ற முறைகளை காட்டிலும் செலவு குறைந்த முறையாகும்.

இமெயில் மார்கெட்டிங் என்றால் என்ன

தயாரிப்பு மற்றும் சேவையை பற்றி வாடிக்கையாளர்களுக்கு தெரியப்படுத்த அவர்களின் இமெயில் முகவரிக்கு தகவல்களை அனுப்புவது இமெயில் மார்கெட்டிங் ஆகும். நாம் அனைவருமே தெரிந்தோ தெரியாமலோ இணையத்தைப் பயன்படுத்தும் போது நம்முடைய தகவல்களை ஆங்காங்கே விட்டுச் செல்கிறோம்.

உதாரணமாக செய்தி இணையதளங்களை பயன்படுத்தும்போது SignIn செய்யச் சொல்லி ஒரு பாப்அப் தோன்றும், நாமும் தொடர்ந்து செய்திகளை பெற இமெயில் மற்றும் போன் நம்பர் ஆகியவற்றை தந்து விடுவோம். அவ்வாறு பெறப்படும் இமெயில்களுக்கு, அந்த இணையத்திலிருந்து தொடர்ந்து ஈமெயில்கள் வந்து கொண்டே இருக்கும். இதேபோல் நாமும் நம்முடைய வாடிக்கையாளர்களின் மின்னஞ்சல் முகவரிகளை சேகரிக்க முடியும்.

(பல இணையதளங்கள் இமையில்களை, விற்பனை செய்கின்றன. அவ்வாறு இமெயில்களை விற்பதும், வாங்குவதும் சடடப்படி குற்றமாகும்.) 

அவ்வாறு சேகரிக்கப்பட்ட இமெயில்களுக்கு ஈமெயில் மார்க்கெட்டிங் செய்யும் கருவிகளை கொண்டு நம்முடைய சேவை அல்லது தயாரிப்பின் தகவல்களை வாடிக்கையாளர்களுக்கு ஒரே நேரத்தில் அனுப்ப முடியும்.

சாதாரணமாக ஜிமெயில், யாஹூ போன்றவற்றை பயன்படுத்தி குறிப்பிட்ட அளவிலான இமெயில் முகவரிகளுக்கு மட்டுமே ஒரே நேரத்தில் இமெயில்களை அனுப்ப முடியும். மாறாக அதிகமான இமெயில் முகவரிகளுக்கு ஒரே நேரத்தில் இமெயில்களை அனுப்பினால் அவை Spam ஆக மாறக்கூடும்.

எனவே அதிகமான இமெயில் முகவரிகளுக்கு ஒரே நேரத்தில் இமெயில்களை அனுப்ப இமெயில் மார்க்கெட்டிங் செய்யும் கருவிகளைப் பயன்படுத்துவது நல்லது.

சிறந்த இமெயில் மார்க்கெட்டிங் கருவிகள் :

Mail Chimp (மெயில்சிம்ப்)

Constant Contact (கான்ஸ்டண்ட் கான்டாக்ட்)

Sendinblue (சென்ட்இன்புளு)

Drip (ட்ரிப்)

Get Response (கெட் ரெஸ்பான்ஸ்

SendGrid (சென்ட்கிரிட்)

இமெயில் மார்கெட்டிங்-ன் வகைகள்:

Direct Emails 

உங்கள் தயாரிப்புகள் மற்றும் சேவைகளைப் பற்றி நேரடியாகப்  வாடிக்கையாளர்களுக்கு நீங்கள் அனுப்பும் மின்னஞ்சல்கள் நேரடி மின்னஞ்சல்கள் ஆகும். பெரும்பாலும் இவை சலுகைகள், கூப்பன்கள் மற்றும் தள்ளுபடிகள் பற்றி கூறும் மின்னஞ்சல்கள் ஆகும்.

Newsletter Email 

செய்திமடல் மின்னஞ்சல்கள் வாடிக்கையாளர்களுடன் உரையாடலை உருவாக்க பயன்படுகின்றன. செய்திமடல் மின்னஞ்சல்கள் ஒரு நிறுவனத்தை பற்றிய பின்னுட்டம் , அறிக்கை அல்லது ஆய்வு பற்றியதாக இருக்கலாம். செய்திமடல் மின்னஞ்சல்கள் வாடிக்கையாளர்களை உங்கள் நிறுவனத்துடுடன் இணைக்கிறது.

Transactional Emails

நாம் டிக்கெட் புக்கிங் செய்யும் இணையதளங்களை பயன்படுத்தும் பொது, உறுதி (Confirmation) செய்வதற்காக இமெயில்கள் அனுப்பப்படும், பல இணையதளங்களில் பொருட்களை வாங்கும் போது பண பரிவர்த்தனை செய்வோம், அப்போது நமக்கு இமெயில்கள் அனுப்பப்படும். இதுபோன்ற மின்னஞ்சல்கள் பரிவர்த்தனை மின்னஞ்சல்கள் ஆகும்.

அடுத்த கட்டுரையில் Facebook மூலம் எப்படி மார்கெடிங் செய்து உங்கள்தொழிலை எவ்வாறு அடித்த கட்டத்திற்கு கொண்டுசெல்வது என்பதை பற்றிப் பார்ப்போம்.

Share on facebook
Facebook
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp

Would you like to start a project with us?